Wednesday, September 8, 2010

நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி


செப்டம்பர் 1, 2010
எப்போதும் எதாவது சிந்தனையில் இருக்கும் இருக்கும் நமக்கு நம்
அறிவை தூசு தட்டி மேலும் வளர்த்துக்கொள்ளும் வழிமுறையைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

காலத்தின் வேகமான மாற்றம் ஆனாலும் நம் மூளை அப்படியே
ஒரே வேலையைத்தான் திரும்ப திரும்ப செய்கிறது. வேலை
செய்யவே நேரம் இல்லை இதில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள்
நேரம் எங்கே இருக்கிறது என்றாலும் நாமும் நம் அறிவை
வளர்த்துக்கொள்ள நேரம் ஒதுக்கித் தான் ஆக வேண்டும் அந்த
வகையில் நம் அறிவை வளப்பதற்கான அத்தனை வழிமுறை
-களையும் கொண்டு ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.braingle.com
இந்தத்தளத்தில் சென்று நாம் அறிவை வளர்க்கும் கணக்கு முதல்
கேள்வி பதில்கள் (குவிஸ்) ,விளையாட்டு போன்றவற்றின் மூலம்
நம் அறிவை தூசு தட்டிக்கொள்ளலாம். குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படுத்தும்படியே இந்தத்தளம்
இருக்கிறது.மெசஸ் போர்ட் மூலம் நமக்கு தெரியாத கேள்விகளைக்
கூட கேட்கலாம் பதிலும் கிடைக்கும். மூளையை சுறு சுறுப்பாக
வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும்
இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
அன்பும் மட்டும் நம்முடன் இருந்தால் நட்பு தானாகவே சேரும்
இதில் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
2.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
3.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
5.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
6.திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
7.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
8.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
9.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
10.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
பதில்கள்:
1.இந்தியா,2.வன்மீகம்,3.இந்தியா,4.வானம்பாடி,
5.விக்டோரியா மகாராணி,6.பிரதமர்,7.விசாகப்பட்டினம்,
8.அல்பேனியா,9.அமெரிக்கா,10.சுவிட்சர்லாந்து.
இன்று செப்டம்பர் 1 
சிறப்பு நாள்: கிருஷ்ண ஜெயந்தி 
ஆண்டுதோறும் பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக்
கொண்டாடுகிற விழாவாகும்.. ஆவணி மாதத்தில்
தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)
ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா
நிகழ்கிறது.கோகுலாஷ்டமி என்று தென்
இந்தியாவிலும், அஷ்டமி ரோகிணி என்று கேரளாவிலும்
போன்ற பெயர்களாலும் இவ்விழா குறிக்கப்படுகிறது

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo