Wednesday, September 8, 2010


மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்

ஜூலை 13, 2010
விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா மைக்ரோசாப்ட் -உடன்
இணைந்து செவ்வாய் கிரகத்தின் மிக துல்லியமான இதுவரை
வெளிவராத புகைப்படங்களை வெளியீட்டுள்ளது இதைப் பற்றிய
சிறப்பு பதிவு.

மைக்ரோசாப்ட் நிறுவனம் நாசாவுடன் இணைந்து தொலைநோக்கு
கருவிக்கான அப்ளிகேசன் ஒன்றை உருவாக்கியுள்ளது வேர்ல்ட்
வைட் டெலஸ்கோப் (World Wide Telescope) என்று
பெயரிடப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேசன் மூலம் வான்வெளிக்
காட்சிகளை துல்லியமாக பார்க்கலாம்.மைக்ரோசாப்ட் -ன்
இந்த அப்ளிகேசன் துணையுடன் நாசா தற்போது வெளியீட்டுள்ள
செவ்வாய் கிரகத்தின் படம் பிரமிப்பாகவும் ஆச்சர்யமாகவும்
உள்ளது.இதுவரை எடுக்கப்பட்ட படங்களை விட துல்லியமாக
செவ்வாய் கிரகத்தை காட்டுகிறது இதைப்பற்றி மேலும் பல
தகவல்கள் தெரிந்துகொள்ள நாசாவின் இந்த இணையதளத்தை
சொடுக்கவும்.
இணையதள முகவரி : http://www.worldwidetelescope.org
வின்மணி சிந்தனை
நீ நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அடுத்தவரை
குறைகூறாதே இது ஒரு நாகரிகமற்ற செயல்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ?
2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ?
3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது ?
4.உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு ?
5.பெண்டகன் என்றால் என்ன ?
6.இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய
 முதல் பெண்மணி யார் ?
7.மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான
 நிலையத்தில் உள்ளது?
8.போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது
 இடம் பெற்றது?
9.உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது ?
10.ஆக்ஸிசன் இல்லாத பொருள் எது ?
பதில்கள்:
1.லாசா -தீபெத், 2.செக்கோஸ்லாவாகியா,3.25-03-1957-ல்,
4.14,44,85,740 ச.கி.மீ,5.அமெரிக்காவின் ராணுவம் ,விமானம்
மற்றும் கப்பல் படையின் ஒருங்கினைந்த தலைமையகம்,
6.புவன்ஸ்ரீ கெளதம்,7.மும்பை விமான நிலையம்,
8.1714-ம் ஆண்டு,9.வெனிசுலா நீர்விழ்ச்சி,10.மண்ணெண்ணை.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாரதியார் எந்த ஊரில் காலமானார் ?
2.பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை எது ?
3.பீரங்கிகள் தயாரிக்க பயன்படும் உலோகம் எது ?
4.செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகத்திற்கு என்ன பெயர் ?
5.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
6.பசுவைப்போல் குரல் கொடுத்து கத்தும் மீன் எது ?  
7.விலாங்கு மீனுக்கு மறுபெயர் என்ன ?
8.கடல் விசிறியின் மறுபெயர் என்ன ?
9.ஸ்வர்ண ரேகா நதி எந்த மாநிலத்தில் உள்ளது ?
10.’நைல் முதலை எங்கே அதிகம் காணப்படுகிறது ?
பதில்கள்:
1.சென்னை, 2.மோனோ சேக்ரைடு,3.கன்மெட்டல்,
4.பித்தளை,5.லில்டில்பாய், 6.கழுகு மீன்,7.ஈல்,
8.பவளப்பூச்சி,9.ஓரிஸ்ஸா,10.தென் ஆப்பிரிக்கா
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பெட்ரோலியம் நட் என்னும் மரவகைகள் எந்த நாட்டில்
 வளர்கின்றன ?
2.உலகிலேயே மிகச்சிறிய புத்தகம் எது ?
3.யுனானி வைத்திய முறை பிறந்த நாடு எது ?
4.பைபிள் நிகழ்ச்சிகளை பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாடு எது?
5.பூமியின் மொத்த பரப்பில் தண்ணீரின் பரப்பளவு என்ன ?
6.புழு , பூச்சிகளை தாக்காத மரம் எது ?  
7.மகாராஷ்டிர மாநிலத்தின் எப்பகுதியில் ஆதிவாசிகள்
  வசிக்கின்றனர் ?
8.உலகிலேயே முதல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின்
  பெயர் என்ன ?
9.உலகிலேயே மிகப்பெரிய சுவர்க்கடிகாரம் எங்குள்ளது ?
10.டீசலை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.பிலிப்பைன்ஸ், 2.உமர்கய்யம் காவியம் - 1933,3.கிரேக்கம்,
4.அப்காசியாவில் உள்ள செபல்டா மலை,5.222.4 கோடி ச,கி,மீ
6.வேப்பமரம்,7.செளதா என்னும் பகுதியில், 8.லூயிஸ் வாஸ்,
9.பிரான்ஸ் அஸ்ட்ரானமிகல் கடிகாரம்,10.ரூடால்ப் டீசல். 
. 
இன்று ஜூலை 12 
பெயர் : உமர் தம்பி 
மறைந்த தேதி : ஜூலை 12, 2006
தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை
வழங்கிய ஆளுமைகளுள் ஒருவராவார்.இவர்
கணினியிலும் இணையத்திலும் தமிழை
பயன்படுத்துவதற்கு உதவக்கூடிய பல
செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும்
ஆக்கியளித்துள்ளார். தமிழ் இணையம் இருக்கும் வரை
உங்கள் பெயர் நிலைத்து இருக்கும் நன்றி.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo