Wednesday, September 8, 2010

எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்.

ஆகஸ்ட் 7, 2010
காப்பி செய்ய முடியாத இணையதளத்தின் தகவல்களை எந்த
மென்பொருள் துணையும் இல்லாமல் காப்பி செய்து நம் கணினியில்
சேமித்து வைக்கலாம் இதைப்பற்றிய சிறப்புப் பதிவு.

இணைய உலகத்தில் உள்ள பல மில்லியன் இணையதளங்களுக்கு
மத்தியில் சில இணையதளங்களில் தகவல்களை காப்பி செய்வதை
தடுப்பதற்கு ”Right click Disable Copy ”  என்ற Script பயன்படுத்துகின்றனர்.
தங்கள் இணையதளத்தில் இந்த ஸ்கிரிப்டை பயன்படுபவர்களுக்கு
தெரியாத தகவல் ஒன்று இருக்கிறது அநேக பேருக்கு இது
தெரிந்திருக்கலாம். அதாவது இது போன்ற ஸ்கிரிப்ட் -ஐ ஆபாச
இணையதளங்களில் தங்கள் தகவல்களை பாதுகாக்க மட்டும் தான்
பயன்படுத்துகின்றனர். இது போன்ற ஸ்கிரிப்ட் உள்ள
இணையதளங்களை பெரும்பாலான பயர்வால் தடுப்பு மென்பொருள்
அனுமதிப்பதில்லை இதனால் அவர்கள் தளம் பல கணினியில்
தெரிய வாய்ப்பில்லை, சில உலாவிகள் கூட இந்த ஸ்கிரிப்ட்
உள்ள தளங்களில் வைரஸ் இருக்கலாம் என்ற எச்சரிக்கையைக்
காட்டி தளத்தை காட்டாமல் வெளியே வருகிறது. நாம் உருவாக்கும்
வலைப்பக்கத்தில் இதைப் போன்ற ஸ்கிரிப்ட்-டை பயன்படுத்தாமல்
இருப்பது நலம். இது போன்ற காப்பி செய்வதை தடுக்கும் ஸ்கிரிப்ட்
உள்ள தளங்களில் தகவல்களை நம் கணினியில் எப்படி சேமிக்கலாம்
இதற்கு எதாவது மென்பொருள்  இருக்கிறதா என்று கனடாவில்
இருந்து குமாரசாமி என்பவர் கேட்டிருந்தார்.அவருக்காக மட்டுமின்றி
அனைவருக்காகவும் இந்தப் பதில். நண்பருக்கு, இதைப்போன்ற
தளங்களில் இருந்து தகவல்களை சேமிப்பதற்கு எந்த மென்பொருளும்
தேவையில்லை. எந்த இணையதளத்தில் Right click Copy disable
செய்யப்பட்டிருக்கிறதோ அந்த இணையதளத்தை திறந்து வைத்துக்
கொண்டு “ Edit ” மெனுவுக்கு சென்று அங்கு இருக்கும் Select All
என்பதை சொடுக்கவும் அடுத்து மறுபடியும் Edit மெனுவுக்கு சென்று
“Copy “காப்பி என்பதை சொடுக்கவும். இனி மைக்ரோசாப்ட் வேர்ட்
மென்பொருளை இயக்கி அங்கு ” Edit ” சென்று Paste செய்யவும்.
எளிதான முறையில் நம் கணினியில் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.
இதற்கான Short cut key- இருக்கிறது.. இணையதளத்தை திறந்து
கொண்டு Ctrl + A அழுத்தவும் அடுத்து Ctrl + C அழுத்தவும் அடுத்து
வேர்டு கோப்பினை திறந்து Ctrl + V என்பதைக் கொடுத்தும்
பயன்படுத்தலாம். பல வழிகள் இருந்தாலும் இது ஒரு எளிதான வழி
முறையாக இருக்கும். விரைவில் நேரம் கிடைத்தால் SQL Injection
மூலம் ஒரு தளத்தின் முக்கிய தகவல்களை எப்படி திருடுகின்றனர்
என்றும் ஒரே நிமிடத்தில் நம் தளத்தின் பக்கங்களை வைரஸ் உள்ள
பக்கங்களாக எப்படி மாற்றி அமைக்கின்றனர் என்றும் இதிலிருந்து
நாம் எப்படி தளத்தைப் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றியும்
வீடியோவுடன் ஒரு பதிவு இடலாம் என்று  இருக்கிறோம்.
வின்மணி சிந்தனை
எல்லோரிடமும் மரியாதையை எதிர்பார்க்காதீர்கள் ஏனென்றால்
எல்லோரும் கடவுள் தான். மரியாதை கொடுத்தால் அதை
உதாசீனப்படுத்தாதீர்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் மிக நீளமான ஆறு எது ?
2.மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது ?
3.இந்தியாவில் மணியார்டர்சேவை எப்போது தொடங்கப்பட்டது?
4.ஐ.நா.பொதுச்செயலாளரின் பதிவி எத்தனை ஆண்டுகள்?
5.ஜெர்மனி நாட்டின் தேசியப்பூ ?
6.விமானத்தின் வேகத்தை அளக்கப்பயன்படுத்தப்படும் கருவி எது?
7.’கண்ட்லா துறைமுகம்’ எங்கு உள்ளது ?
8.இங்கிலாந்து நாட்டின் தேசியப்பூ எது ?
9.காமராசரின் அரசியல் குரு யார் ?
10.காந்திஜி எத்தனை நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்?
பதில்கள்:
1.பிரம்மபுத்திரா, 2.செம்பு,3.1880 ஆம் ஆண்டு
4.4 ஆண்டுகள், 5.சோளப்பூ,6.ரபி மீட்டர்,7.குஜராத்,
8.ரோஜா,9.சத்தியமூர்த்தி,10.2,338 நாட்கள்.
இன்று ஆகஸ்ட் 7   இரவீந்திரநாத் தாகூர்
பெயர் : இரவீந்திரநாத் தாகூர்,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 7, 1941
புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.
இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன
பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக
குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய
மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின்
தேசிய கீதமாக உள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக
இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo