Wednesday, September 8, 2010

ஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.

ஜூலை 10, 2010
கூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில்
கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான
செய்தியை வெளியீட்டு உள்ளது இதை ஜீமெயிலில் எப்படி
சேர்க்கலாம் என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
படம் 1
மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது என்பதை நன்கு உணர்ந்து
தினமும் ஏதாவது புதுமையை புகுத்தி வரும் கூகுள் தன் அடுத்த
புதுமையாக ஜீமெயிலில் மெயில் கையெழுத்தில் புகைப்படத்தை
சேர்க்கலாம் என்பதை அறிவித்துள்ளது. ஜீமெயில் நாம் அனுப்பும்
ஒவ்வொரு மெயிலுக்கும் கீழேயும் நம்முடைய கையெழுத்தை
அதாவது செல்லப்பெயர்,முகவரி என சேர்த்து அனுப்பும் வசதி
கூகுள் signature -ல் உள்ளது நமக்கு தெரியும் ஆனால் இப்போது
எழுத்தை மட்டுமல்ல படத்தையும் Signature ஆக சேமித்து
வைக்கலாம் இதானால் நாம் அனுப்பும் ஒவ்வொரு மெயிலுடனும்
நம் சேமித்து வைத்த புகைப்படமும் சேர்ந்தே செல்லும். இதற்கு
ஜீமெயிலில்  நம்முடைய கணக்கை திறந்து கொண்டு அதில்
வலது பக்கத்தின் மேல் இருக்கும் Settings என்பதை தேர்ந்தெடுத்து
அதன் பின் வரும் திரையில் படம் 1 -ல் இருப்பது போல்
Signature என்பதை தேர்ந்தெடுத்து நம் புகைப்படத்தை எளிதாக
சேர்த்துக்கொள்ளலாம். படத்தின் நீள அகலத்தையும் குறைத்துக்
கொள்ளலாம். நம் கையெழுத்தை ஆன்லைன் மூலம் உருவாக்கி
அதை கூட படமாக சேமித்து இதில் பதிவேற்றம் செய்யலாம்.
ஆன்லைன் -ல் நம் கையெழுத்தை எப்படி உருவாக்குவதுபற்றி
அறிய இந்தப்பதிவை பார்க்கவும்.
ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க
வாசகர்களின் வேண்டுகோளுக்கினங்க சற்று விரிவாக :
உங்கள் புகைப்படத்தை இணையத்தில் தரவேற்றம் (அப்லோட்)
செய்வதற்கு பல தளங்கள் இருக்கின்றன உதாரணமாக நாம்
http://imageshack.us என்ற தளத்தை எடுத்துக்கொள்வோம்
இந்தத் தளத்திற்கு சென்று நம் புகைப்படத்தை படம் 2-ல்
காட்டியபடி Browse என்ற பொத்தானை அழுத்தி தேர்ந்தெடுத்து
அதன் பின் நம் இமெயில் முகவரியையும் கொடுத்து
Upload Now என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
படம் 2
படம் 3
அடுத்து வரும் திரை படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது இதில்
நாம் Direct link என்ற கட்டத்திற்குள் இருக்கும் முகவரியை
காப்பி செய்து கொள்ள வேண்டும். அடுத்து நம் ஜீமெயில்
கணக்கை திறந்து அதில் வலதுபக்கத்தில் மேல் இருக்கும்
Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் படம் 1-ல் காட்டியபடி
Signature என்பதை தேர்ந்தெடுக்கவும்.
படம் 4
இப்போது படம் 4 -ல் காட்டியபடி இந்த ஐகானை அழுத்தியவுடன்
வரும் படம் பதிவேற்ற முகவரி கொடுக்கும் கட்டத்தில் நாம்
ஏற்கனவே காப்பி செய்து வைத்திருக்கும் படத்தின் முகவரியை
கொடுக்கவும். இறுதியாக Save Changes என்ற பொத்தானை
அழுத்தவும். இனி நீங்கள் யாருக்கெல்லாம் மெயில்
அனுப்புகிறீர்களோ அவர்களுக்க்கு இப்போது நாம் சேர்த்த
புகைப்படமும் சேர்ந்து செல்லும்.
வின்மணி சிந்தனை
தன்னால் எல்லாம் முடியும் என்றும் நினைப்பவன்
எதாவது ஒரு வழியில் சறுக்குவான். எல்லாம் இறைவனின்
ஆசிப்படி என்று நினைப்பவன் வாழ்வில் ஒருபோதும்
சறுக்குவதில்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இயற்கை வைர நகைகள் எப்போது யாரால் அணியப்பட்டது ?
2.’சர்தார் சரோவர் ‘ அணைக்கட்டு அமைந்துள்ள நதி எது ?
3.ஃபீல்டு மார்ஷல் என்ற உயர்பதிவிக்கான துறை எது ?
4.SARRC -ன் தலைமையம் எங்கு அமைந்துள்ளது ?
5.’ரியாஸ்’ என்ற ரூபாய் நோட்டு எந்த நாட்டுக்கானது ?
6.இந்தியாவில் பார்ஸிக்கள் முதன்முதலின் குடியேறிய இடம் எது?
7.வானவெளியில் செலுத்தப்பட்ட முதல் விண்கலத்தின்
  பெயர் என்ன ?
8.’தில் வாரா’ கோவில்கள் அமைந்துள்ள இடம் எது ?
9.தனவந்தரி விருதுகள் எந்தத்துறைக்காக அளிக்கப்படுகிறது ?
10.’நேஷனல் போலீஸ்அகாடமி’ எந்த இடத்தில் அமைந்துள்ளது?
பதில்கள்:
1.1430-ம் ஆண்டு அக்னஸ் ஸோரெல், 2.நர்மதா நதி,
3.கடற்படை, 4.காட்மண்டு,5.இரான் நாடு, 6.டையூ,
7.ஸ்புட்னிக், 8.ராஜஸ்தான்,9.மருத்துவம்,10.அபுரோடு.
இன்று ஜூலை 9 
பெயர் : கைலாசம் பாலசந்தர்,
பிறந்ததேதி : ஜூலை 9, 1930
தமிழ்த் திரைப்பட இயக்குனர்.இவர் மேடை
நாடகத்  துறையில் இருந்து திரைத்துறைக்கு
வந்தவர். இவருடைய பெரும்பாலான படங்களில்,
மனித உறவு முறைகளுக்கு இடையிலான
சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே
கருப்பொருளாய் விளங்கின.தமிழ்த் திரையுலகின் முக்கிய
நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம்
செய்தவர். K.B என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo