Wednesday, September 8, 2010

நம் கணினிக்கு ஆகும் மின்சார செலவை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்.

ஆகஸ்ட் 2, 2010
நம் கணினிக்கு தினசரி ஆகும் மின்சார செலவை துல்லியமாக
கண்டுபிடிக்கலாம். திரைக்கு (Monitor) ஆகும் மின்சாரம் முதல் டிஸ்க்
(வன்தட்டு) -க்கு ஆகும் மின்சாரம் வரை அத்தனையையும் மிகச்சரியாக
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

கண்டுபிடிப்பில் கூகுள்  மட்டுமல்ல நாங்களும் தான் என்று சொல்லும்
அளவிற்கு ’தல’ மைக்ரோசாப்ட்-ன் அடுத்த கண்டுபிடிப்பு நம்மை
மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. கணினிக்கு ஆகும் மின்சார செலவை
மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற புது சாதனையை
மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
மென்பொருளின் பெயர் ”ஜோல் மீட்டர்” இந்த மென்பொருளை இங்கு
இருக்கும் சுட்டியை சொடுக்கித் தரவிரக்கிக் கொள்ளுங்கள்.
Download
கணினி ஆன் செய்ததில் இருந்து இதுவரை எவ்வளவு மணி நேரம்
நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இதற்கு ஆகும் மின்சாரம்
என்ன என்பதை கிலோவாட்ஸ் -ல் நமக்கு சொல்கின்றனர். நாம் எந்த
நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் மின்சார வரியைப் போட்டு
நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு பலருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
முதலிடம் பெறுவதை விட அதை தக்கவைத்துக்கொள்வதற்க்காக
மனிதன் செய்யும் எல்லாத் தவறுகளையும் நிறுத்தினால் இந்த
பூமி சொர்க்க பூமியாகும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார் ?
2.’ மண நூல்’ என்பது எந்த நூலின் வேறுபெயர் ?
3.சென்னைப்ப் பல்கலைக்கழகம் எப்போது உருவாக்கப்பட்டது ?
4.இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
5.பால் உற்பத்தியைப் பெருக்க அரசு கொண்டு வந்த திட்டத்தின்
 பெயர் என்ன ?
6.’சுதந்திரா கட்சி’யை உருவாக்கியவர் யார் ?
7.’திருத்தொண்டர் புராணம்’ என்பது எந்த நூலின்
   வேறொரு பெயர்?
8.கல்பாக்கம் அனுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
9.சென்னை மாநகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது ?
10.பவானிசாகர் அணை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
பதில்கள்:
1.செயங்கொண்டார், 2.சீவகசிந்தாமணி,3.1857 ஆம் ஆண்டு,
4.சர்தார் வல்லபாய் படேல், 5.வெண்மைப் புரட்சி, 6.ராஜாஜி,
7.பெரியபுராணம், 8.காஞ்சிபுரம்,9.1688 ஆம் ஆண்டு,10.ஈரோடு
இன்று ஆகஸ்ட் 2
பெயர் : அலெக்சாண்டர் கிரகாம் பெல் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 2, 1922
இவர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும்
அறியப்படுகிறார். இவரது தாயாரும்
மனைவியும் செவிடராதலினால் இவரது
ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக
அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம்
ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல்
தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo