Wednesday, September 8, 2010

தினமும் ஒரு நவீன ஆங்கில வார்த்தையை எளிதாக கற்கலாம்.


ஆகஸ்ட் 27, 2010
தினமும் ஒரு நவீன வித்தியாசமான ஆங்கில வார்த்தையை
எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

இதுவரை நாம் ஆங்கிலத்தில் அதிகமாகப் பயன்படுத்தாத நவீன
வார்த்தைகளை நமக்கு தேர்ந்தெடுத்து தினமும் ஒரு வார்த்தையை
நமக்கு கொடுக்கின்றனர். இந்த ஆங்கில வார்த்தைக்கு டிவிட்டர்
மூலம் யார் வேண்டுமானாலும் நமக்கு தெரிந்த பொருளை கூறலாம்.
அடுத்த நாள் இதற்கான நவீன சிறந்த விளக்கத்தையும் சரியான
அர்த்தம் கொடுத்தவர்களின் பெயரையும் இவர்கள் தளத்தில்
காட்டுகின்றனர்.
இணையதள முகவரி : http://www.artwiculate.com
டிவிட்டர் முகவரி : http://twitter.com/artwiculate
நம் ஆங்கில அறிவின் திறமையை வளர்ப்பதாகவும் தினமும்
சில நிமிடங்கள் செலவு செய்து தினமும் ஒரு நவீன ஆங்கில
வார்த்தையை எளிதாக கற்றுகொள்ளலாம். டிவிட்டர் மூலம்
அன்றைய தினம் கொடுக்கும் வார்த்தைக்கு நமக்கு தெரிந்த
அர்த்தத்தையும் கொடுத்து நாமும் போட்டியில் பங்கு பெறலாம்.
உங்கள் பதில் சரியாக இருந்தால் உங்கள் பெயர் அடுத்த நாள்
இந்த தளத்தில் வரும். ஆங்கில வார்த்தைகள் அதிகம்
கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாரதப்போர் நடந்த இடம் எது ?
2.சூரியமண்டலம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
3.ரேடியேட்டர் என்பது என்ன ?
4.லிப்ட் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
5.குலா சிகரம் எந்தக்கிரகத்தில் உள்ளது ?
6.அரபிக்கடலின் ராணி என்பது எந்த மாநிலம் ?
7.மூக்கில் பல் உள்ள விலங்கு எது ?
8.நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
9.தோலினால் சுவாசிக்கும் உயிரினம் எது ?
10.நீர் குடிக்காத விலங்குகள் எவை ?
பதில்கள்:1.குருஷேத்திரம்,2.கோபார் நிக்கஸ்,3.குளிர்விக்கும் கருவி,
4.ஓடிஸ்,5.வெள்ளி,6.கேரளா,7.முதலை,8.குதிரை,9.மண்புழு,
10.எலி, கங்காரு
 .
இன்று ஆகஸ்ட் 27 
பெயர் : மவுண்ட்பேட்டன் பிரபு ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 27, 1979
பர்மாவின் முதலாவது கோமகன் மவுண்ட்
பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர்
ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர்.
பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப்
பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின்
முதலாவது ஆளுநராகவும் (Governor-General) இருந்தவர்.


 சிந்தனை
சுயநலவாதிகளை விட்டு எப்போதும் விலகி இருங்கள்
அவர்களால் நம் இறை குணம் காணாமல் போகும்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo