Wednesday, September 8, 2010

ஆன்லைன்-ல் ஜீப் ( Gif ) அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்

ஆன்லைன் மூலம் நாம் உருவாக்கும் படங்களை நகரவிடலாம்
இதற்கு எந்த மென்பொருளும் தேவையில்லை ஆன்லைன் மூலம்
எளிதாக நாம் உருவாக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 1
நம்மிடம் இருக்கும் படங்களை ஒன்றாக சேர்த்து திரையில் ஒட
வைக்கமுடியும் GIF என்று சொல்லக்கூடிட அனிமேசன் இமெஜ்
மூலம் படங்களை சிறிய அனிமேசனாக சேமித்து வைக்கலாம்.
Gif அனிமேசன் உருவாக்க பல இணையதளங்கள் இருந்தாலும்
நமக்கு மிக மிக எளிதாக ஆன்லைன் மூலம் எந்த மென்பொருள்
உதவியும் இல்லாமல் உருவாக்கலாம்.இதற்காக ஒரு தளம் உள்ளது
இணையதள முகவரி : http://www.createagif.net
படம் 2
இந்த தளத்திற்கு சென்றதும் படம் 1-ல் காட்டியபடி நாம் Image 1,
Image 2  மற்றும் image 3  என்பதற்க்கு அருகில் உள்ள Choose
என்ற பொத்தானை அழுத்தி நாம் அனிமேசன் செய்ய விரும்பும்
படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.எத்தனை படம் வேண்டுமானாலும்
வைத்துக்கொள்ளலாம் படங்களை தேர்வு செய்து முடித்ததும்
Choose Speed என்பதில் படங்கள் மாறும் வேகத்தை தேர்ந்தெடுத்துக்
கொள்ளவும். தேர்ந்தெடுத்து முடித்ததும் Create என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அவ்வளவு தான் அடுத்த திரையில் (படம் 2)
நாம் சேர்த்த படங்கள் GIF அனிமேசனாக உருவாகிவிடும். படத்தின்
மேல் Right Click செய்து நம் கணினியில் Save image என்பதை
சொடுக்கி சேமித்துக் கொள்ளவும். நாம் உருவாக்கிய இந்த
அனிமேசனை நாம் டிவிட்டர் பேஸ்புக்,ஆர்குட் போன்ற சோசியல்
தளங்களிலும் இங்கிருந்து எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த
தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
அன்பு செய்பவர்களை நாம் எப்போதும் கடவுளாகவே
நினைக்க வேண்டும், நம் மேல் அதிகம் அன்பு செய்யும்
நம் தாயும் கடவுள் தான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நன்கு வளர்ந்த யானை ஒரு நாளைக்கு எவ்வளவு தீனி
 உட்கொள்ளும் ?
2.ஐஸ் கீரிமை கண்டுபிடித்தவர் யார் ?  எப்போழுது ?
3.சூரியனின் மேல்பரப்பில் வெப்ப நிலை என்ன ?
4.வயதானவர்களுக்கு ஏற்படும் எழும்பு சிதைவின் பெயர் என்ன ?
5.எறும்புகளை பற்றி ஆராயும் கலைக்கு என்ன பெயர் ?
6.உலகிலேயே பெண்களுக்கான முதல் காவல்துறைப்படை
 எப்போது தொடங்கப்பட்டது?
7.காந்திஜி இறந்தபோது அனுதாபம் தெரிவிக்காத ஒரே நாடு எது?
8.இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் யார் ?
9.மனித உடலில் பாஸ்பரத்தின் அளவு என்ன ?
10.இந்தியாவின் இன்சாட் 1D எங்கிருந்து ஏவப்பட்டது ?
பதில்கள்:
1.100 பவுண்டுகள், 2.ஜெரால்ட் டிஸ்ஸேன் கி.பி.1620,
3.6,000 டிகிரி C,4.ஆஸ்டியோபரோசிஸ்,5.மைர் மெக்காலஜிம்
6.1928- பிரிட்டன்,7.ரஷியா,8.மார்டின் லுதர் கிங்,9.2,000
தீக்குச்சிகள் தயாரிக்கும் அளவு,10.அமெரிக்கா -கேப் கேனவரால்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பண்டைய கிரேக்கர்கள் தாயக்கட்டையை எதிலிருந்து
  தயாரித்தனர் ?
2.மருத்துவமனைக்கு தேவைப்படும் அபினை எந்த நாடு
 அதிகமாக கொடுக்கிறது ?
3.பட்டுத் தொழிலின் இரகசியம் ஜப்பானுக்கு எப்போது
  தெரியவந்தது ?
4.வாயு மண்டலத்தில் ஆண்டு தோறும் கலக்கும் கார்பனின்
  அளவென்ன ?
5.மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது அதன் உயரம் என்ன ?
6.ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக தங்கபதக்கம் வென்றநாடு எது?
7.குதிரைப் பந்தைய போட்டிகள் எந்த நாட்டில் முதன் முதலாக
 தோன்றியது ?
8.நாய்கள் ஊர் எல்லைக்குள் வரக்கூடாது என்ற சட்டம் உள்ள
  நாடு எது ?
9.உலகில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடு எது ?
10.மேல் நாடுகளில் காவலுக்காக வளர்க்கப்படும் உயிரினம் எது?
பதில்கள்:
1.ஆடுகளின் கணுக்கால் எலும்பில், 2.இந்தியா,3.கி.பி.199-ல்,
4.சுமார் 60,000 லட்சம் டன்,5.டாட்டாங் - 13.7 மீட்டர்,
6.ரஷ்யா,7.கிரேக்க நாட்டில்,8.சிங்கப்பூர்,
9.டாங்கோ 1000க்கு 3 பேர்,10.கின்னிக்கோழிகள்.


இன்று ஜூலை 15  
பெயர் : காமராஜர் ,
பிறந்ததேதி : ஜூலை 15, 1903
காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள்
முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார்.
1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை
மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார்.
இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி
வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு
இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.
இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை.
உங்களால் தேசத்திற்கு பெருமை.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo